‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகவுள்ளது.

ஜூலை 29 ஆம் தேதி சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. #Adheera என்ற சஞ்சய் தத் கதாபாத்திரத்தின் பெயர் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.