லாகூர்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் என்பவரை மணந்துள்ளார் 

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2010 அம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். ஏற்கனவே சோயிப் மாலிக்கிற்கு 2002ம் ஆண்டு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் விவாகரத்து பெற்று சானியா மிர்சாவை 2 ஆவதாக திருமணம் செய்தார். சோயிப் மாலிக் – சானியா தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளார்.

சானியா மிர்சாவுக்கும், சோயிப் மாலிக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகின. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் மனைவி சானியா மிர்சா தொடர்பான பதிவுகளை சோயிப் மாலிக் நீக்கினார்.  இதையொட்டி இருவரும் விவாகரத்து பெற்றதாகத் தகவல் வெளியாகின., சானியா மிர்சா தனது மகனுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.

தற்போது சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்  என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.  எனவே சானியா மிர்சாவை சோயிப் மாலிக் விவாகரத்து செய்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

சானியாவின் தந்தை,

“சானியா மிர்சா சோயிப் மாலிக்கிற்கு விவாகரத்து கொடுத்துள்ளார். அவர்  கணவனைத் தன்னிச்சையாக விவகரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளார் ” 

என்று தெரிவித்துள்ளார்.