மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது.

ஏப்ரல் 9-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன்.

இந்த படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கவனித்துள்ளார். இந்நிலையில் காட்டுப்பேச்சி பாடுவது போல் வரும் வுட்றாதீங்க யப்போ பாடலில் வரும் காட்டுப்பேச்சி மாஸ்குகளை அணிந்த தமது மாணவர்களுடன் சாண்டி மாஸ்டர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.