ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் படம், ‘மைக்கேல்’. இதன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார் .
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இத்திரைப்படம், பிரம்மாண்டமான ஆக்சன் படமாக உருவாகிறது.

விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ‘கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்’ என்ற வாசகம் இணைக்கப்பட்டிருக்கிறது. சந்தீப் கிஷனின் சிக்ஸ் பேக் கட்டுடல், கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், நீண்ட மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரம்.. ஆகியவை சிறந்த ஆக்ஷன் அவதாரத்தை அவர் திரையில் படைக்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதனால் இணையத்தில் வெளியான சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்ப்பை விட, கூடுதலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்துவருகிறது.
Patrikai.com official YouTube Channel