பெண்களை அவதூறாக பேசிவரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பளர் சங்கம், தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் ராஜன், இயக்குநர் திருமலை ஆகியோர் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

78 வயதாகும் பயில்வான் ரங்கநாதன் தனது 40 வது வயதில் முந்தானை முடிச்சு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ஆவாரம் பூ உள்ளிட்ட பல்வேறு படங்களில் தலைகாட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

தற்போது படவாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில் சினிமா விமர்சகராகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார்.

இவர் நடத்திவரும் யூ-டியூப் சேனலில் பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை மேலே இருந்து நேரில் பார்த்தது போல் கூறி வியூவர்ஷிப்பை அதிகரித்துக் கொண்டார்.

சமீபகாலமாக இந்த யூ-டியூப் சேனலில் இவர் பதிவிட்டு வரும் செய்திகளில் பெண்கள் குறித்து இழிவான வார்த்தைகளை பேசி வருவதாகக் கூறி புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து இவர் மீது ராஜன் மற்றும் இயக்குநர் திருமலை ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.