ஒற்றுமைச் சிலை வளாகத்தில் மணல் அள்ளுவதில் நடந்த மிகப் பெரிய ஊழல்

Must read

ர்மதா

ற்றுமைச் சிலை என அழைக்கப்படும் உலகின் மிக உயரமான படேல் சிலை உள்ள வளாகத்தில் மணல் அள்ளுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் அருகே சர்தார் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான இச்சிலை ஒற்றுமைச் சிலை என அழைக்கப்படுகிறது. இந்த வளாகத்தில் பழங்குடியினர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதற்காக மணல் அள்ளப்பட்டு நிலத்தை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த மணல் அள்ளும் பணியில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக நர்மதா மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் இங்கிருந்து அள்ளபட்ட சுமார் 4.5 மெட்ரிக் டன் எடையுள்ள மணல் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இந்த மணல் திருடப்பட்டது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.

வழக்கமாக இது போல வழக்குகள் பதியும் போது உடனடியாக பெயர் தெரியாத நபர்கள் என குறிப்பிடப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்படும். ஆனால் தற்போது காவல்துறை நேரடியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயருடன் முதல் தகவல் அறிக்கை தயாரிக்க எண்ணி உள்ளது. இவ்வாறு பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்டப்படுவது மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை என கூறப்படுகிறது.

More articles

Latest article