டெல்லி: சனாதன தர்மம் குறித்த அவதூறு பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில், சமீபத்தில்  நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது’ எனக் கூறி இருந்தார். இவரது கருத்து இந்துக்களின் மீதான கடும் விமர்சனமாக வட மாநிலங்களில் உருவெடுத்து வருகிறது. நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் உள்பட பலர் கடிதம் எழுதி வலியுறுத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில், சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி  தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான வினீத் ஜிண்டால் என்பவர் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யாத சென்னை போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வினீத் ஜிண்டால் அம்மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

சனாதனம் சர்ச்சை: உதயநிதி, சேகர்பாபு பதவி விலக கோரி செப்.11ம் தேதி பாஜக முற்றுகை போராட்டம்!