சென்னை: தமிழ்நாட்டில் இந்து மதத்தின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு மாறாக, அவரது தாயாரும், முதலமைச்சர் ஸ்டாலின் மனைவியுமான துர்கா ஸ்டாலின் மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் செய்து வருகிறார்.
திமுக ஆட்சி பதவி ஏற்றதும், தனது வேண்டுகோளை நிறைவேற்றிய இறைவனை கோவில் கோவிலாக சென்று தரிசித்து வருவதுடன், காணிக்கைகளையும் செலுத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். ஆனால், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பகுத்தறிவு பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். அதுபோல அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும், இந்துமதம் குறித்து அவதூறாக பேசி மக்களிடையே வேறுபாட்டை உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கு சென்று கிரக பரிகாரங்களையும், சிறப்பு வழிபாடுகளை செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதியின் கருத்துக்கு எதிரான மனநிலையில் உள்ள துர்கா ஸ்டாலின் அமைதி வேண்டியும், தனது குடும்பத்தினருக்காகவும் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.
தற்போது மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ள துர்கா ஸ்டாலின், மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆலயத்தில்சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இந்த கோவில், நந்தியின் ஆணவத்தை அடக்கி சிவன் குரு பகவானாக விளங்கும் ஸ்தலம். இதைத்தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.