பெங்களூரு: சனாதன சர்ச்சை வழக்கு தொடர்பாக கர்நாடகா நீதிமன்றத்தில் ஆஜரான உதயநிதிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரின் வேண்டுகோளின் பேரில் இந்த வழக்கை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது, மேலும் ரூ. 1 லட்சம் ரொக்க உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைகுறிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின் போது உதயநிதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு பணிகள் காரணமாக, கடந்த 2 முறை ஆஜராத அமைச்சர் உதயநிதி இந்த முறையாக ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அமைச்சர் உதயநிதி இன்று தனது வழக்கறிஞர் குழுவினருடன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முன்னதாக, கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு செப். 2-ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சநாதன ஒழிப்பு மாநாட்டில், சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சா் உதயநிதி பேசியிருந்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதுபோல, இந்த விவகாரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சநாதனம் பேச்சுக்கு எதிராக பரமேஷ் என்பவர் அமைச்சர் உதயநிதி மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி இன்று நேரில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
முன்னதாக, நேற்று இரவு பெங்களூருக்கு சென்றார் உயந்தி. இன்று காலையில் அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கான கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தி.மு.க. தரப்பு வக்கீல்கள் உடனிருந்தனர். மேலும் அவருடைய வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கி கர்நாடக மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.