சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் தீப்பற்றி எரிந்த சாம்சங் நோட் 2

Must read

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த சாம்சங் நோட் 2 மொபைலில் இருந்து நெருப்பு கசியவே விமான ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைலை தண்ணீரில் மூழ்கடித்து தீயை அணைத்தனர்.

samsung

விமானம் தரையிறங்கப் போகும் தருணத்தில் தலைக்குமேல் இருக்கும் பொருட்கள் வைக்கும் பகுதியில் இருந்து புகை கசியவே அதை கண்ட பயணிகள் பதற்றமடைந்து விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். விமான ஊழியர்கள் வந்து அந்த கேபினை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 2 மொபைலில் இருந்து நெருப்பு கசிவதை பார்த்துள்ளனர், உடனே அதை தண்ணீரில் போட்டு நெருப்பை அணைத்துள்ளனர்.
இத்தகவலை சிவில் விமான போக்குவரத்து துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் சாம்சங் நோட் மொபைல்களை கொண்டு செல்லக்கூடாது அப்படியே கொண்டு சென்றாலும் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்த பின்னரே கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இது பற்றி தகவல் தெரிவித்த சாம்சங் நிறுவனம் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மிக உயர்வாக மதிக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை செய்து வருகிறோம் என்று தெரிவித்தது.

More articles

Latest article