சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல் தயாரிப்பு நிறுத்தம்!

Must read

 
புதுடெல்லி:
சாம்சங் கேலக்ச 7நோட் மொபைல் போன் தயாரிப்பை நிறுத்தி உள்ளதாக தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது.
note-7
உலகில் மொபைல் தயாரிப்பில்   முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். அண்மையில்  வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்கள் அடிக்கடி தீ பிடிப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, குறைபாடு உடைய செல்போன்கள் திரும்ப பெறப்பட்டு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய போன்கள் வழங்கப்பட்டன.
ஆனாலும், மீண்டும் அதே பிரச்சினை ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.  இதன் காரணமாக தென்  கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி நோட் 7 திறன்பேசியின் தயாரிப்பை நிரந்தர மாக நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
 
பின்னர் இந்த ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துவோர், பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டாம் என்றும், அதை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் சாம்சங் நிறுவனம் கூறியது.
galzxy
பேட்டரியில் உள்ள பிரச்சனைகள் காரணமாக இந்த வகை செல்பேசிகள் தீ பற்றி எரிகின்ற நிகழ்வுகள் தொடர்ந்து கூறப்படுவதாலும், இந்த பிரச்சனையின் காரணமாக மாற்றி வழங்கப்பட்ட செல்பேசிகள் சிலவற்றிலும் அதே பிரச்சனை தொடர்வதாலும், சாம்சங் இந்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
கேலக்ஸி நோட் 7 செல்பேசிகளை வாங்கியிருப்போர் அதற்கான தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் அல்லது வேறு வகையான சாங்சங் செல்பேசிகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
 

More articles

Latest article