பாகுபாடுகள் களைந்து பெண்குழந்தைகள் முன்னேற மோடி வாழ்த்து!

Must read

 
டில்லி,
ர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகள் முன்னேற ’பேட்டி பச்சாவ்’, ‘பேட்டி படாவ்’ என இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் வாழ்த்தினர்.
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பெண் குழந்தைகள் முன்னேற அனைவரும் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
modi
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் கல்வியறிவை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ’பேட்டி பச்சாவ்’ (பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்), ‘பேட்டி படாவ்’ (பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவை அளியுங்கள்) உள்பட மத்திய அரசின் சார்பில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்திவரும் பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை வேரோடு களைந்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அனைத்துவிதமான வாய்ப்புகளும் அளிப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article