தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவன தலைவர் ஜே ஒய். லீ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவருக்கு பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் கொடுத்தது, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு லீ சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுப் புது தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவனம், லீ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தொடங்க இருந்தத் திட்டங்களுக்குத் தேவையான பணம் இல்லாமல் திணறி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கியது

பணம் அதிகம் புரளும் நிறுவனங்களுள் ஒன்றான சாம்சங் நிறுவனத் தலைவரின் பரோலுக்காக காத்திருக்கும் நிறுவன ஊழியர்கள், வரும் வெள்ளிக்கிழமை அவர் விடுதலைக்குப் பின் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பல்வேறு நவீன தொழில்நுட்பத் திட்டங்களை மீண்டும் தொடங்க முடிவு செய்திருக்கின்றனர்.

இருந்தபோதும், லீ மீது போதை மருந்து பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.