
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி . அதை தொடர்ந்து மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

பிரபல தொழிலதிபரான அக்ஷய் வர்தே என்பவரை கடந்த 2014ம் ஆண்டு மகாராஷ்டிரா முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 2015ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் 2ஆவது முறையாக கர்ப்பமாக உள்ளார். தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் சமீரா , தண்ணீருக்குள் அடியில் மிதந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை போட்டோஷூட் எடுத்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
[youtube-feed feed=1]