ஒரே குடும்பம்: 4 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

Must read

 
ஐதராபாத்:
தராபாத்தில் குடும்பத்தலைவர் மாரடைப்பால் இறந்ததால் அவரது குடும்பத்தை  சேர்ந்தவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஐதராபாத்தை அடுத்த ரங்காரெட்டி பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன்.  இவர்  நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி வந்தார்.
train
நேற்று இரவு சத்யநாராயணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  இதில் அவர் மரணம் அடைந்தார்.
இதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர்.  சத்யநாராயணன்  இறந்ததை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவர்  இல்லாத வாழ்கையை எண்ணிப்பார்க்கக்கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக தாய் மற்றும் மகள்கள், மகன் ஆகியோர்  வாழ்வதற்கு விருப்பமில்லாமல்  சாக வேண்டும் என முடிவு எடுத்தனர்.
அதன்படி இன்று அதிகாலை அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வந்த ரெயிலில்  4 பேரும் மொத்தமாக  பாய்ந்து  தற்கொலை செய்துகொண்டனர்.  இதில் 4 பேரும் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தனர்.
இந்த  நெஞ்சை பதற வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article