சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம்

Must read

திருச்சி:
மயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், ‘வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அருளும்’ அம்மன் அருள்பாலிக்கும் ஸ்தலமாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி, இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் இன்று காலை காலை 6.45 முதல் 7.25 மணிக்குள் கடக லக்னத்தில் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

More articles

Latest article