பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் “சலோன் டு சாக்லேட்” என்ற பெயரில் சாக்லேட்டுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடை கண்காட்சி நடைபெற்றது.

இன்று துவங்கிய இந்த கண்காட்சியில் சாக்லேட் உடையணிந்த மாடல்கள் ஒய்யாரமாய் நடந்துவந்த அணிவகுப்பு நடந்தது.

அக்டோபர் 28 முதல் நவம்பர் 1 வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில், சாக்லேட் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பாரிஸ் நகரில் நடைபெறும் இந்த சாக்லேட் கண்காட்சி இப்போது 26 வது முறையாக நடைபெறுகிறது.

கொரோனா பரவலுக்கு பின் நடைபெறும் முதல் கண்காட்சி என்பதால், வழக்கமாக நடைபெறும் சாக்லேட் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு இம்முறை “மறுமலர்ச்சி” என்று பெயரிடப்பட்டிருந்தது.