வாஷிங்டன்: பேஸ்புக் சமூக வலைதளத்தின் தாய நிறுவனத்தின் பெயர் மெட்டா (META) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘பேஸ்புக்கை, உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது பேசிய அதன் நிறுவனர் MARK ZUCKERBERG, பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாக மாறி வருகிறது. இன்றைய நவீன யுகத்தில்  கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்அப்  என ஏராளமான சமுக வலைதளங்கள்  உலா வருகின்றன.  இதுபோன்ற சமூக வலைதளங்கள் இன்றைய வாழ்க்கையில் அங்கமாகவே மாறி விட்டது.

இந்த சமூக வலைதளங்களில் பயனர்களிடையே பெரும் பெக்கை பெற்றது பேஸ்புக். உலகம் முழுவதும் சுமார் 285 கோடிக்கும் மேற்பட்டோர் ,தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தை பொழுது போக்கிற்காக மட்டுமின்றி,  கருத்துகளை பரிமாறி கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதுபோல, வணிக நிறுவனங்கள் சமூக வலை தளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளரின் கருத்துகளை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சமூக வலை தளங்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது. இது மட்டுமின்றி, ஒரு சிலரால்சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் மறந்துவிட முடியாது.

இவ்வளவு புகழ்பெற்ற சமூக இணையதளமான பேஸ்புக், தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளது. ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தில் பேசிய அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் (MARK ZUCKERBERG) பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். பேஸ்புக் தற்போது நன்றாக போய்க்கொண்டிருக்கும் வேளையிலேயே அதன் பெயரை திடீரென மாற்றியது பயனர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதற்கும் மார்க் பதில் அளித்துள்ளார்.

பேஸ்புக் மூலம் சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அதனைக் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம்  வந்துள்ளது என்று கூறியவர்,  ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே ‘மெட்டா’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆப்களின் பெயரில் எந்த மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இனிமேல், நாங்கள் முதலில் மெட்டாவேர்ஸாக இருக்கப் போகிறோம், முதலில் பேஸ்புக் அல்ல” என்று கூறியஜூக்கர்பெர்க்  “எங்கள் பிராண்ட் ஒரு தயாரிப்புடன் மிகவும் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளது,  டிஜிட்டல் அவதாரங்கள் மூலம் மக்கள் தொடர்பு கொள்ளும் மெய்நிகர் இடங்களுக்கு அதன் பார்வை விரிவடைகிறது என்றாலும், நிறுவனம் அதன் கார்ப்பரேட் கட்டமைப்பை மாற்றவில்லை என்று கூறியுள்ளார்.

இதன் அடுத்தகட்டமாக மெய்நிகர் (virtutal) ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனால் பேஸ்புக் பெயரை மெட்டா என மாற்றியதாக கூறியதுடன்,  கூறிய ஜுக்கர்பெர்க்,  அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துவதற்கான வழி இதுவல்ல என்று கூறிய ஜுக்கர்பெர்க் ,  “நாம் அதை நன்றாக உருவாக்கினால் அதை மாற்ற மெட்டாவேர்ஸ் நமக்கு வாய்ப்பளிக்கிறது” என்றார்.

மேலும், வணிக ரீதியிலாக அமெரிக்க பங்கு சந்தையில் பேஸ்புக்கின் குறியீடு எம்விஆர்எஸ் என்ற டிக்கர் சின்னத்தின் கீழ் வர்த்தகம் செய்யும். இது டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும்  ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம்,   Facebook மற்றும் அதன் செயலிகளான Instagram, Messenger மற்றும் WhatsApp ஆகியவை Facebook Reality Labs இலிருந்து ஒரு தனி பிரிவில் வைக்கப்படும், இது நிறுவனத்தின் பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி தயாரிப்புகளை உருவாக்குகிறது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.