பிரபல இந்தி நடிகர் சல்மான்கான்    1998–ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்த மானை வேட்டையாட தடை இருக்கிறது.
ஆனால் சல்மான்கானும் அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும்  மான்வேட்டை ஆடியதாக  வழக்கில் சிக்கினர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2006–ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10–ந் தேதி தீர்ப்பு அளித்தது.   இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில்  மேல்–முறையீடு செய்தார்.  இந்த முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம்,  விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், தண்டனையை நிறுத்தி வைத்தது. சல்மான்கான் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை  ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும்  சல்மான் கான் மீது  தொடரபட்ட  இரண்டு  வழக்குகளில் இருந்தும் அவர்  விடுதலை செய்யப்ப்பட்டார்.
இத் தீர்ப்பு நாடுமுழுதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.