வாஷிங்டன்: உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா, அமேஷான் உள்பட பல  முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே கிட்டத்தட்ட 1லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்த ஆண்டில் பணியிலிருந்து நீக்கம் செய்தனர். ஆனாலும் தற்போது வரை அந்த அலை ஓயவில்லை.

இந்த வரிசையில் அமெரிக்க ஐடி நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனமும் இந்த ஆண்டு மேலும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதுபோல, அமேசான் நிறுவனம் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு (2021)  நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்த அமேசான் நிறுவனம். இந்த ஆண்டு மேலும் 18ஆயிரம் பேரை நீக்க முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக,  அமேசான் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. இதனால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளோம் என கூறியிருப்பதுடன்,  மேலும், இந்த பணி நீக்கமானது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீக்கமானது அமேசான் வரலாற்றுலேயே மிகப் பெரியதாக கருதப்படுகிறது.

அதேவேளையில், அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு ஐடி நிறுவனமான சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனமும் தனது நிறுவன பணியாளர்களில் 2500 பேரை  நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. 1999 ஆம் ஆண்டு சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் துவங்கப்பட்ட போது, இதன் துணை நிறுவனராக இருந்த  மார்க் பெனியாஃப் என்பவர். . சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தலைவராகவும் இவர் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில்,  பொருளாதார நெருக்கடி, குறைந்த விற்பனை மற்றும் இலக்கை அடைவதில் தொய்வு காரணமாக பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தில் மொத்தம்  73,000 பணியாளர்கள்  பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் விற்பனை குறைவு மற்றும் பலவித பொருளாதார நெருக்கடிகளால் செலவை குறைப்பதற்காக கடந்த 2022ம் ஆண்டு நூற்றுக்கணக்கானோரை  பணி நீக்கம் நடவடிக்கையை எடுக்கத்  இதையடுத்து, 2023ம் ஆண்டு சுமார் 2500 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

பிரபலமான ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து, தங்களது ஊழியர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்து வருவது, ஐடி ஊழியர்களிடையே அச்சத்தை எற்படுத்தி உள்ளது.