டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மாணாக்கர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி படிப்புகள் செல்லாது என யூஜிசி  அறிவித்திருந்தது. கடந்த 2015-2016-ம் ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன், பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.