சேலம்:

ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை விலக்க கோரி, சேலத்தில் நேற்று இரவு சாலை மறியல் நடந்தது.

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தடை தொர்வதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த ஐநம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று இரவு சேலம் மூணு ரோடு பகுதியில் திரண்டனர்.   ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மயலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.