சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாடு முழுவதும் நீட் தேர்வை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். ;இவர்களுக்காக ; 2 ஆயிரத்து மேற்பட்ட  தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலத்தில் நீட் தேர்வு எழுத 26 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் மொத்தம் 17 ஆயிரத்து 460 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இந்த நிலையில் சேலம் கொண்டலாம் பட்டி சவுடேஸ்வரி கல்லூயில் தேர்வு எழுத ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி தேர்வு எழுத இன்று காலை சென்றார். அங்கு மாணவியின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்த அலுவலர்கள், தேர்வு மையம் மாறி வந்துவிட்டதாகக் கூறினர்.

சேலம் கொண்டலாம் பட்டி சவுடேஸ்வரி கல்லூரி, சேலம் கோட்டை பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் தேர்வு எழுத  அந்த மாணிக்கு ஹால்டிக்கெட் வந்துள்ளது. சவுடேஸ்வரி கல்லூரிக்கு அருகாமையில் இருப்பதால் தேர்வு எழுத சென்றுள்ளார். அங்கு அவரது ஹால்டிக்கெட்டுகளை பரிசோதித்த கண்காணிப்பாளர் மாணவி தேர்வு மையம் மாறி வந்திருப்பதாக கூறியுள்ளனர். இதன்காரணமாக மாணவி செய்வதறியாமல் திகைத்துள்ளார்.இதனையடுத்து அங்கிருந்த பெற்றோர்கள் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.இந்த குழப்பத்திற்கு யார் காரணம் என கண்டறிந்து அந்த மாணவி உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என அங்குள்ள கூடியுள்ள பெற்றோர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.தேர்வு அலுவலர்கள் மாணவியை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியை காவலர்கள் மிரட்டி அனுப்பியதாகவும் புகார் எழுந்துLள்ளது.