டில்லி

சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைப்பது குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  அதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதா? இந்த திட்டத்திற்கான மொத்த செலவு எவ்வளவு? எப்போது பணிகள் தொடங்கி நிறைவு பெறும்? என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார்.

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

நிதின்கட்கரி,

”பாரத் மாலா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட உள்ள சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தின் மொத்த மதிப்பு 7 ஆயிரத்து 230 கோடி ரூபாய் ஆகும்.  இந்த சாலை எந்தெந்த பாதையில் சாலை அமைக்கப்படும் என்பது குறித்து மாநில அரசின் கருத்துக்காகக் காத்திருக்கிறோம்.  மாநில அரசின் கருத்துக்கள் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும்”

எனத் தெரிவித்துள்ளார்.