அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ம் தேதி நடைபெற உள்ளது.

‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை அடுத்து கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் திரள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முதல் 100 நாட்களில் பூத் ஒன்றுக்கு 10 பேர் வீதம் தொகுதிக்கு 5000 பேரை 543 மக்களவை தொகுதியில் இருந்தும் ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்ல சங் பரிவார் அமைப்புகள் தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் அயோத்தியில் நாளொன்றுக்கு சுமார் 50000 முதல் 1 லட்சம் பேர் திரள வாய்ப்புள்ளதை அடுத்து திருப்பதிக்கு அடுத்தபடியாக கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியின் 84 கோசி பரிக்ரமா பகுதி முழுவதும் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளது.

கோசி பரிக்ரமா பகுதி முழுவதும் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட உள்ளதாக அம்மாநில கலால் துறை அமைச்சர் நிதின் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், அயோத்தியின் பிற பகுதிகளில் மது விற்பனைக்கு எந்தவித தடையும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு ஜனவரி 6 முதல் நேரடி விமான போக்குவரத்து…