ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைப்பு – ஜெகன் மோகன் அறிவிப்பு

Must read

ஹைதராபாத்

கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படவுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நிதிக்காக மார்ச் மாதம் ஆந்திர மாநில அமைச்சரவை, சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் மாநில நிதிநிலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு இம்மாதமும் ஊதியக் குறைப்பை தொடரவுள்ளதாக ஜெகன்மோகன் கூறியுள்ளார்.

ஆனால் ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குடும்பத்திற்கான ஊதியத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படவில்லை.

இது குறித்து மாநில தலைமைச் செயலாளர், விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“மத்திய அரசுப் பணியாளர்களின் வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் 40 சதவீதம், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 50 சதவீதமும் ஊதியம் குறைக்கப்படும்.

கேபினட் அமைச்சர்கள், அதனையொத்த துறைப் பணியாளர்களின் ஊதியத்தில் 75 சதவீதம் குறைக்கப்படும்.

பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஓய்வூதியருக்கு ஊதியக் குறைப்பு ஏதும் இல்லாமல் முழுமையாக வழங்கப்படும்.

தொடர் ஊரடங்கால் தெலங்கானா மாநிலத்தின் நிதிநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை அரசுக்கு கிடைத்த வருவாய் 100 கோடி மட்டுமே.

மத்திய அரசின் நிதியுதவி மற்றும் கடன்கள் பிறதுறையின் நலத்திட்டங்களுக்கு பயன்தருகின்றன.

மார்ச் 31 முதல் முதல்வர்,  அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ஏற்கெனவே தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் ஊரடங்குத் தாக்கத்தால் மாநில அரசின் நிதிநிலை மிகவும் வறட்சியாக உள்ளது.

மாநில வருவாயில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தோரை ட்ரேஸ் செய்தல், மக்களை தனிமைப் படுத்துதல், பாதுகாப்பு கருவிகள், மருந்துகள்  வாங்கியது, தொற்றாளர்களின் உடல் நலனை பாதுகாத்தல் போன்ற காரணங்களுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது.

அதோடு இந்த ஊரடங்குச் சூழலில் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கடமையும் அரசுக்கு உண்டு” என தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

More articles

Latest article