தெலங்கானா

நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதனை சமாளிக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் தெலங்கானா அரசு பேரவை,  மேலவை உறுப்பினர்கள்,  அரசு பணியாளர்கள்,  ஓய்வூதியதாரர்களுக்கு   ஊதியத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

ஊதியக் குறைப்பு நடவடிக்கையை நான்கு விதங்களில் நடைமுறைப்படுத்த உள்ளது. முதல்வர்,  சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள்,  பொதுத் துறை தலைவர்கள், அதன்  உறுப்பினர்களுக்கு 75% ஊதியம் குறைக்கப்பட உள்ளது. 

ஐஏஎஸ்,  ஐபிஎஸ்,  ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அதிகாரிகளின் ஊதியத்தில் 60 சதவீதமும், மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 50 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.

 நான்காம் நிலை ஊழியர்,  ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட உள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 50 சதவீதமும்,  நான்காம் நிலையில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களிடம் 10 சதவீதமும்  ஊதியக் குறைப்பு  செய்யப்பட உள்ளதாக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பிறகட்சிகளிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது…