மும்பை

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஹைட்ரோ கார்பன் பிரிவு ஊழியர்களுக்கு நிர்வாகம் ஊதிய வெட்டை அறிவித்துள்ளது.

ரிலையான்ஸ் நிறுவனத்தின் பல தொழில்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் முக்கியமான ஒன்றாகும்.  நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் எந்த ஒரு வாகனம் மற்றும் தொழிலகங்கள் இயங்கவில்லை.   எனவே தற்போது பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் தேவை அடியோடு குறைந்துள்ளது.  இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் முழுமையாக முடங்கி உள்ளது.

பிரதமர் மோடி ஊரடங்கால் நஷ்டமடையும் நிறுவனங்கள் எக்கார்ணத்டைகொண்டும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது எனக் கூறி உள்ளார்.  ஊரடங்கால்  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் பிரிவு கடும் இழப்பைச் சந்தித்து வருகிறது.    இந்த இழப்பைச் சரிக்கட்ட ஆட்குறைப்புக்குப் பதில் ஊதிய வெட்டை அமல் படுத்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த பிரிவில் பணி புரியும் ஊழியர்களில் வருட ஊதியம் ரூ. 15 லட்சத்துக்கும் குறைவாக உள்ளோருக்கு முழு ஊதியம் வழங்கப்பட உள்ளது.  ரூ.15 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு அவர்களின் நிகர வருமானத்தில் இருந்து 10% குறைக்கப்பட உள்ளது.  ஊழியர்களின் திறனைப் பொறுத்து  வழங்கப்படும் ஊக்கத் தொகை மற்றும் வ்ருடாந்திர போனஸ் ஆகியவை வருடத்தின் முதல் காலாண்டில் வழங்கப்படும் .  இந்த வருடம் அது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடபப்டவில்லை..

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஊழியர்களுக்கு ஊதிய வெட்டு அமலாக்கப்படுவதால் தனக்கு ஊதியம் தேவை இல்லை என முடிவு செய்துள்ளார்.  இந்த நிறுவனத்தில் உள்ள மற்ற இயக்குநர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்கள் ஊதியத்தில் இருந்து 30 முதல் 50% வெட்டுக்குச் சம்மதம் அளித்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் ஊதியம் ரூ. 15 கோடி குறையும் என்றாலும் அவருக்கு நிறுவன லாபத்தில் கிடைக்கும் ஈவுத் தொகை ஏராளமாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.