சென்னை
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுக்கு பிரிவு டிஜிபி ஆக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு டி ஜி பி ஆக தற்போது ஜே கே திரிபாதி பணி புரிந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நாளையுடன் அதாவது ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அவர் இடத்தில் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு புதிய டிஜிபி ஆக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். சைலேந்திர பாபு ஐ பி எஸ் பட்டம் பெற்றவர் ஆவார்.
இவர் ஏற்கனவே தனது பணிக்காக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் தமிழக முதல்வரிடம் இருந்து விருதுகள் பெற்றவர் ஆவார்.