கோல்டுகோஸ்ட்:

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்

71 நாடுகள் பங்கேற்கும் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்டில் நேற்று கோலாகலமாக  தொடங்கியது.

அதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டியில், ஆண்களுக்கான எடை பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் குருராஜ் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

இந்நிலையில்,   மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் இதுவரை 2 பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில், முதல் தங்கத்தை வென்று மீராபாய் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளார்.

நேற்று தொடங்கி நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி வரும் 15-ந் தேதி  வரை  நடைபெற உள்ளது.