வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுக்கும் சாய்பாபா மந்திரத்தை பார்க்கலாம்.

“ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”

இந்த மந்திரத்தை நாம் தினமும் காலையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கிய பின்னர், ‘ஸ்ரீ சாய்பாபா’வை வணங்கி அவரின் திரு உருவத்தின் முன் நின்று இந்த மந்திரத்தை 9 முறை கூற வேண்டும். வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோயிலில் அல்லது வீட்டிலேயே அவரின் திரு உருவம் முன் நின்று வணங்கி, முந்திரி பருப்பு அல்லது கற்கண்டு நிவேதனமாக வைத்து பூஜிக்க வேண்டும்.

அதன் பின்னர் இந்த மந்திரத்தை 108 முறை பக்தியுடன் ஜெபித்து வாருங்கள். இதனால் உங்களின் மனதில் இருக்கும் ஒரு இனம் புரியாத பயம் நீங்கும். உங்களின் மனக்கவலை நீங்கி உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மன மகிழ்ச்சி உண்டாகும். அத்துடன் செல்வ வளமும் பெருகும்…

குருவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆனாலும் தினமும் குருவை வந்தனம் செய்வது மகோன்னதமானது என்கிறார்கள் சாயி பக்தர்கள். அதுபோல தினமும் சாயிபாபாவை ஒரு பத்துநிமிடம் வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது ஐதீகம்.

தினமும் பாபாவின் படத்துக்கோ சிலைக்கோ பூஜை செய்யுங்கள். தீப ஆரத்தி காட்டுங்கள். முன்னதாக, அவருக்கு எதிரே ஒரு பத்துநிமிடமேனும் அமர்ந்து, பாபாவின் மூல மந்திரத்தைச் சொல்லுங்கள்.இதோ… அந்த மூல மந்திரம்;

ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி.

இந்த ஒற்றை வரி கொண்ட மூல மந்திரத்தை, கண்கள் மூடி ஜபியுங்கள். தினமும் 108 முறை சொல்லுங்கள். முடிந்ததும் தீபாராதனை காட்டி வழிபடுங்கள். தினமும் சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி என்று நைவேத்தியம் செய்ய வேண்டும் என்கிற அவசியமெல்லாமில்லை. நம்மிடம் இருப்பதை பாபாவுக்குக் கொடுத்தாலே போதும்.அதை ஏற்றுக் கொள்வார். சாய்பாபாவின் இந்த மந்திரங்களை சொல்லி வர நம் குடும்பத்தில் விரைவில் நல்லது நடக்கும்.