டில்லி

பிரபல வர்த்தக நிறுவனமான சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்.

பிரபல வர்த்தக நிருவனமன சஹாரா குழுமத்தின் சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

“சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் பல்வேறு உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆம் தேதி அவருடைய உடல்நலம் மோசமடைந்தது. எனவே, கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சுப்ர்தா ராய்க்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்படப் பல பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு 10.30 மணியளவில் காலமானார்  அவருக்கு வயது 75 ஆகும்.

சுப்ரதா ராய் மறைவு, சஹாரா இந்தியா அமைப்பினருக்கு ஆழ்ந்த வருத்தம் ஏற்படுத்தி உள்ளது. அவர் ஒரு வழிகாட்டி சக்தியாக, தலைவராக விளங்கினார்.  அவருடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் ஊக்கம் அவர் அளித்தவராக இருந்தார்”

என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மறைந்த சுப்ரதா ராயின் இறுதிச் சடங்குகள் பற்றிய விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.