டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம்  உள்ள விமானங்களில்   9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை  மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன்  12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த  விமான  விபத்து காரணமாக  இதுவரை   274 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், விபத்துக்குள்ளான போயிங் தயாரிப்பான  AI-171 ஏர் இந்தியா விமானம் விபத்தை அடுத்து போயிங் விமானங்களில் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்தியஅரசு உத்தரவிட்டது.

இதையடுத்து ஏர் இந்தியாவிடம் பயன்பாட்டில்  இருந்த   9 போயிங் 787 விமானங்களில் பாதுகாப்பு சோதனை  மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் எஞ்சிய 24 விமானங்களில் விரைவில் சோதனை முடிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.