கோல்கோஸ்ட்:

காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியா கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஊனமுற்றோருக்கான பளுதூக்குதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் சச்சின் சவுத்ரி 201 கிலோ எடை தூக்கி 181.0 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் அவர் ஆண்கள் பிரிவில் வெங்கலப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊனமுற்றோர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா முதன் முறையாக பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.