பரிமலை

பரிமலை ஐயப்பன் கோவில் நிறைபுத்தரிசி விழாவுக்குச் சென்ற தந்திரி கண்டனர் மகேஷ் மோகனருக்கு இரு ஆண்டுகளாக தடங்கல் ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நடப்பது வழக்கமாகும். இந்த பூஜை நாட்டில் விவசாயம் செழித்து மக்களின் வறுமை நீங்கி தடையின்றி உணவு கிடைக்க வேண்டும் என்னும் வேண்டுதலுடன் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு நிறைபுத்தரிசி பூஜைக்காகச் சபரிமலை கோவில் நடை நேற்று முன் தினம் மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது.   நேற்றைய தினம் அதிகாலை 5.30 -6.20  மணிக்குத் தந்திரி கண்டனர் மகேஷ் மோகனர்  முன்னிலையில் நடந்து இரவு 7.30க்கு நடை சாத்தப்பட்டுள்ளது.

இந்த பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

செங்கனூரில் வசிக்கும் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் காரில் சபரிமலைக்குச் சென்றார். பம்பைக்கு 12 கிமீ தொலைவில்  கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் மூடப்பட்டிருந்தது.  எனவே தந்திரி நடந்தே பம்பைக்கு வர முடிவு செய்தார்.  இந்த தகவல் அறிந்த பம்பை காவல் நிலையத்தினர் தங்கள் வாகனத்தில் தந்திரியை அழைத்து வந்தனர்.

இவ்வாறு தடங்கல் ஏற்படுவது இது இரண்டாம் முறையாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிறைபுத்தரிசி பூஜைக்கு தந்திரி கண்டனர் மகேஷ் மோகனர் செல்லும் போது பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது  எனவே அவர் அப்போது புலிமேடு வழியாக நடந்து சன்னிதானத்துக்குச் சென்றார்.