டில்லி

ஐ எ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பு 2020 அறிக்கை குறித்த ஒரு விளக்கத்தை இங்கு காண்போம்

தற்போது நாடெங்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பு 2020 அறிக்கை குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.   இதன் மூலம் நாட்டில் பல முன்னேற்றத் திட்டங்கள் தடையின்றி நிறைவேற்றப்படும் என அரசு  தெரிவிக்கின்றthu.  ஆனால் இது மக்களின் நலனுக்கு எதிரானது என மக்களிடையே  கருத்து எழுந்துள்ளது.   மக்கள் எதிர்க்கும் திட்டத்தையும் இந்த அறிக்கை மூலம் அரசு நிறைவேற்றலாம் என ஆர்வலர்கள்  காரணம் தெரிவிக்கின்றனர்.

இந்தியா தனது முதல்  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பு அறிக்கையை 1994 ஆம் ஆண்டு அளித்தது.   இந்த அறிக்கை 1986 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின் கீழ் அளிக்கப்பட்டது.  அதன்பிறகு இந்த அறிக்கை திருத்தப்பட்டு 2006 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.   இந்த இரு அறிக்கைகளும் புதிய திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க முக்கிய பங்காற்றி வந்தது.

இந்த வருடம் புதிய அறிக்கை ஒன்றை மத்திய அரசு அளித்துள்ளது.  இதில் பல் ஆட்சேபிக்கத் தக்க மற்றும் சுற்றுச்சுழலைப் பாதிக்கும் விதி மாற்றங்கள் சேர்க்கபட்டுள்ள்தாக புகார்கள் எழுந்துள்ளன.  இதன்படி சுற்றுச்சூழல் பாதிப்பு விதிகளுக்கு எதிராக உள்ள திட்டங்களுக்கும் ஒப்புதல் கோரி அரசு விண்ணப்பிக்க முடியும் என்பது முக்கிய மாற்றமாகும்.  இது ஏப்ரல் 1 ஆம் தேதியிடட  உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும்.

இந்த புதிய அறிக்கை மூலம் அரசு அவசியமானது என அறிவிக்கும் அனைத்துத் திட்டங்களும் சுற்றுச்சூழல் பாதிப்பு விதிகளின் கீழ் கொண்டுவர முடியாது.   இப்படிப்பட்ட திட்டங்கள் குறித்த எந்த விவரமும் பொதுமக்களுக்கு அளிக்கத் தேவை இல்லை என அறிக்கை தெரிவிக்கிறது.  இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட திட்டங்களில் உள்நாட்டு நீர்வழி மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.   குறிப்பாக 1.5 லட்சம் சதுர மீட்டர் வரை உள்ள திட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்த அறிக்கை குறித்த சர்ச்சைகளுக்கு மற்றொரு முக்கிய காரணம் பொதுமக்களின் கருத்துக் கேட்கும் முறையாகும்.  இந்த அறிக்கை குறித்த மக்களின் கருத்துக்களைத் தெரிவிக்க ஜூன்10 ஆம் தேதி இறுதித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  கொரோனா காரணமாக இந்த அறிக்கை அரசிதழில் வெளியாகவில்லை.

எனவே  சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த இறுதித்தேதியை ஆகஸ்ட் 10 என நீட்டித்தது.   ஆனால் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த கெடுவை ஜூன் 30 என மாற்றினார்  அதன்பிறகு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 30 ஆம் தேதி அன்று இறுதித் தேதியை ஆகஸ்ட் 11க்கு மாற்றி அமைத்தது.

மக்களின் கருத்துக்களைக் கூற கால அவகாசம் அளிக்காமல் அரசு இவ்வாறு முடிவு எடுத்தது பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.  இதன் மூலம் அரசு தான் நிறைவேற்ற நினைக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அத்தியாவசியமானது எனக் கூறி மக்களின் கருத்துக்களைக் கேட்காமலே நிறைவேற்ற முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.