Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

ஓணம் பண்டிகைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்

Aug 29, 2020

பம்பா: மலையாளிகளின் சிறப்புமிக்க பண்டிகையான, ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் பிரதான பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் பக்தர்கள் கலந்துகொள்ள கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப் படுகிறது.
கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை உத்ராட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆகஸ்டு 31-ந் தேதி திருவோண தின சிறப்பு வழிபாடும்,
செப்டம்பர் 1ந்தேதி,ஓணம் பண்டிகையன்று அவிட்டம் நாள் சிறப்பு பூஜை,
2-ந் தேதி சதயம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 21-ந் தேதி வரை புரட்டாசி மாத பூஜை நடைபெறும்.
இந்ததகவலை  திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

Post navigation

கேரள தலைமைச்செயலக தீ விபத்தில் முக்கிய கோப்புகள் எரிந்ததா? கேரள அமைச்சர் விளக்கம்
கொரோனா அறிகுறி – 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பஞ்சாப் முதல்வர்!

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer