‘சாப்பாட்டு ராமன்’ என்கிற யூடியூப் சேனல் நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமடைந்தவர் பொற்செழியன்.

28 வருடங்களுக்கு மேலாக சின்ன சேலம் பகுதியை அடுத்த கூகையூர் என்னும் பகுதியில் மாற்று வழி மருத்துவம் படித்ததற்கான சான்றுடன் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் மாற்றுவழி மருத்துவத்துக்கு பதிலாக ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன.

இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இவருடைய கிளினிக்கிற்கு சென்று சோதனைநடத்தியதில் அங்கு ஆங்கில மருந்துகள் இருந்ததும், அவற்றை பொற்செழியன் பரிந்துரைத்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த ஆங்கில மருந்துகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவரை கைது செய்து பொற்செழியனின் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்தபோது பொற்செழியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.