பிரபாஸ் நடிப்பில் ,சுஜீத் இயக்கும் படம் சாஹோ . இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர் .

ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ட்ரைலர் ஆகஸ்ட் 10 – தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.