சென்னை:
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மமுன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக முகநூலில் கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவர் மீது புகார் பதிய செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் கடந்த ஒரு மாதமாக அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில், தன்னை காவல்துறையினர் கைது செய்வதை தடுக்கும் வகையில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கனவே கடந்த 3ந்தேதி விசாரணையின்போது, உயர்நீதி மன்ற விடுமுறை கால நீதிபதி இராமத்திலகம், எஸ்.வி.சேகர் மீதான முன்ஜாமின் வழக்கில் காவல் துறை விசாரணை சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை என்றும், சாதாரண மனிதர்கள் மீதான வழக்குகளிலும் இப்படித்தான் விசாரணை நடைபெறகிறதா என சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்கும்படியும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அந்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வந்தது. அப்போது, எஸ்.வி. சேகரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.