சென்னை:

மிழகத்தில் ஜூன் 2ம் தேதி முதல் மாநிலத்துக்குள் சரக்குகளை எடுத்துச் செல்ல, இ – வே பில் பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான அளவில் சரக்குகள் எடுத்துச்செல்லப்படும் வாகனங்கள், கண்டிப்பாக இ-வேல் பில் பெற  வேண்டியது கட்டாயமாகிறது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்படுவதாக இருந்த நிலையில், சில நிர்வாக பிரச்சினை காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 2ந்தேதி முதல் இ-வேல் பில் முறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் இ-வேல் பில் முறைக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாகனங்களில்  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்குகளை அனுப்பும் போது  இ வே பில் என்ற இணைய வழி ரசீதில் சுயமாக குறிப்பிட்டு எடுத்துச் செல்லும் நடைமுறையான இ.வேல் பில் முறை.

சரக்கு அனுப்புவோர் ewaybill.nic.in என்ற  இணையதளம் மூலமாக முன்பதிவு செய்தால் மட்டுமே இவே பில்லை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.