நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இன்று ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. 190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் வெளியாவதாக முன்பே கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷுக்கு ரூசோ பிரதர்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.இது குறித்து ரூசோ பிரதர்ஸ் ட்விட்டரில் “சூப்பர் டா தம்பி” என குறிப்பிட்டு தனுஷோடு பணியாற்றியது உற்சாகம் அளிப்பதாகவும் ஜகமே தந்திரம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி பதிவிட்டுள்ளனர்.

ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் தி க்ரே மேன் திரைப்படமும் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Russo_Brothers/status/1405540728516747280