ஐஎஸ் பயங்கவாத குழு தலைவர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தகவல்!

சிரியா,

லகையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தலைவன் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சீரியாவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் மீதான விமான தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத குழுவின் தலைவன் பாக்தாதி கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒடுக்க ரஷியா தலைமையினலா நேட்டோ படைகள் தாக்கு தல்களை நடத்தி வருகிறது. சிரியாவின் ராக்காக் நகரில் பதுங்கியிருந்த ஐஎஸ் பயங்கரவாதிகளை குறி வைத்து  ரஷ்யா  விமானத்தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் (மே) 28ந்தேதி யன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் அவர் இறந்திருக்கலாம் என்று ரஷியா அமைச்சகம் கூறியுள்ளது.

சிரியாவில் நடைபெற்ற ஒரு ஐஎஸ் பயங்கரவாதிகளின்  கூட்டத்தில். ஐஎஸ் தலைவர்  அபூ பக்கர் அல் பாக்தாதி கலந்து கொண்டார் என்றும், அப்போது நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும்  RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷியாவின்  விமானத் தாக்குதல்கள், ஐஎஸ் பயங்கரவாதிகளின் தலைவர்களின் கூட்டத்தை இலக்கு வைத்தே மே 28 அன்று நடத்தப்பட்டன என்று ரஷிய அமைச்சகத்தை மேற்கோளிட்டு தகவல்கள் வெளியாகி உள்ளது.


English Summary
Russia's military says may have killed IS leader Baghdadi