பெலாசரஸ்: உக்ரைன் ரஷ்யா இடையே இன்று போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், போர் நிறுத்தப்பட்டு ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என உக்ரைன் கறாராக கூறியுள்ளது.

நேட்டோ விவகாரம் காரணமாக, உக்ரைன்மீது பிப்ரவரி 24ந்தேதி ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியது. இன்று 5வது நாளாக ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளது. பல நாடுகள் பேச்சு வார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் போர் காரணமாக இரு தரப்பிலும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒத்துக்கொண்டன. அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அஇதை இன்று ஏற்பதாக தெரிவித்தார். இந்த நிலையில்,  உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை நாட்டின் கோமல் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை நாட்டின் கோமல் நகரில் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டின் குழுவினர், உக்ரைனில் ரஷ்யா உடனடியாக போரை  நிறுத்த வேண்டும், அதைத்தொடர்ந்து ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என  வலியுறுத்தியுள்ளது.