தராபாத்

நாளை ரஷ்யாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் ஆகிய இரண்டு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மே மாதம் 1 ஆம் தேதிமுதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  ஆனால் இந்த இரு மருந்துகளுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சமீபத்தில் ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  அதையொட்டி முதல் கட்டமாக மே 1 ஆம் தேதி அன்று1.50 லட்ச,ம் டோஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வந்தது.  நாளை மேலும் 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வர உள்ளன.