மாஸ்கோ
போலந்து நாட்டின் நடவடிக்கையால் 3 ஆம் உலகப் போர் உருவாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக் உக்ரைனுக்கு எதிரான ரஷியா தொடுத்த போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.
ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவர்டிமிட்ரி மெத்வதேவ்
”உக்ரைனில் போலந்து நாட்டின் ராணுவ கட்டமைப்புகள் அமைவதும் மற்றும் போலந்தின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும் காணப்படுவது, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேரடியான போரை ஏற்படுத்தக் கூடும் .
போலந்து நேட்டோவிடம் இருந்து ஆதரவைக் கோரினால், 3 ஆம் உலகப் போர் ஏற்படக் கூடும் என நம்புகிறேன் ரஷ்யாவின் கூட்டணி நாடுகள் போலந்தின் தீங்கு ஏற்படுத்தும் நோக்கங்களில் இருந்து வளரக் கூடிய அச்சுறுத்தல்களைத் தடுக்க, முறையான பதிலடியைத் தருவதற்குத் தயாராக உள்ளன”
என்று எச்சரித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றிப் பேசிய நிலையில், மெத்வதேவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.