அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ரஷ்யா!

Must read

வாஷிங்டன்: வெனிசுலா நாட்டிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேற வேண்டும். அந்நாட்டின் அரசை நீக்க, அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் இன்னும் உள்ளன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் கைடோவின் மனைவி ஃபாபியானா ரொசேல்ஸை அருகில் வைத்துக்கொண்டு, வெள்ளை மாளிகையிலிருந்து இவ்வாறு கூறியுள்ளார் ட்ரம்ப். இந்தப் பெண்மணியைத்தான் அமெரிக்கா உட்பட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகள், வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துள்ளன.

வெனிசுலாவின் தற்போதைய அதிபராக இருப்பவர், இடதுசாரி என்று அறியப்படும் நிக்கோலஸ் மதுரோ. இவருக்கு ரஷ்ய நாடு முழு ஆதரவளித்து வருகிறது மற்றும் தன் படைகளையும் அந்நாட்டில் கொண்டுபோய் இறக்கியுள்ளது.

வெனிசுலா ஒரு எண்ணெய் வளமிக்க நாடாகும். அந்நாட்டில் பல காரணங்களால் தற்போது பெரியளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வெனிசுலாவின் தற்போதைய அதிபரை அகற்றிவிட்டு,‍ வேறு ஆட்சியைக் கொண்டுவர, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விரும்புகின்றன. அதற்கு ரஷ்யா பெரிய தடையாக இருக்கிறது.

எனவேதான், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர். ஆனால், ரஷ்யா அதைப் புறந்தள்ளி விட்டது. சிரியாவில் இன்னும் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறது அந்நாடு.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article