மாஸ்கோ: ரஷ்யாவில் முதல் முறையாக, 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிடையே பரவி மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சீனாவின் எல்லை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது.

இதையடுத்து, வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந் நிலையில், ரஷ்யாவில் முதல் முறையாக 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜைபாய்க்ஸ்சி, டியூமன் ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருந்திருக்கிறது. இந்த தகவலை துணை பிரதமர் கோலிகோவா உறுதி செய்திருக்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது: வுஹான் மற்றும் ஹூபேயில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்றத் தொடங்கினோம். வுஹானில் 300 பேரும், ஹூபேயில் 341 பேரும் இருக்கின்றனர். திரும்பி வருபவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்.

சீன ரிசார்ட் தீவான ஹைனானில் 2,665 ரஷ்யர்களும் உள்ளனர். பிப்ரவரி 4ம் தேதிக்குள் மீண்டும் ரஷ்யாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று என்று அவர் கூறினார்.