டுத்த ஆண்டு (2018) தென்கொரியாவில் நடைபெற இருக்கும் வின்டர் ஒலிம்பிக் போட்டியில் விளையாட ரஷ்யாவுக்கு சர்வதேச ஒலிம்பிம் சங்கம்  தடை விதித்துள்ளது.

ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இந்த வரலாற்று சிறப்புமிக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்கொரியாவில் உள்ள பியோங்ஹாங்கில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியிடல் விளையாட  ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று சுவிட்சர்லாந்தில் உள்ள லொசன்னேவில் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்க கவுன்சில் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை  இந்திய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், சில ரஷ்ய வீரர்கள் ஒரு நடுநிலை கொடியின் கீழ் போட்டியிட அனுமதிக்கப்படு வார்கள் என்று கூறி உள்ளது.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் எந்தவொரு ஈடுபாடும் காட்டாததால், துணை பிரதம மந்திரியும், முன்னாள் விளையாட்டு மந்திரியுமான  விட்டலி முட்கோவிற்கும்  வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்புக்கு  ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“இது ஒலிம்பிக் விளையாட்டு மற்றும் விளையாட்டு ஒருமைப்பாடுக்கு முன்னோடியில்லாத வகையில் தாக்குதல்,” என்று கூறி உள்ளது.

இதுகுறித்து அடுத்த 24 மணி நேரத்தில் ரஷ்ய அதிபர் புதின் தனது கருத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.