சியோல்

ட கொரிய அதிபரை ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷெர்ஜி ஷோய்கு சந்தித்துள்ளார்.

கடந்த 1953 ஆம் ஆண்டு கொரிய தீபகற்பம் வடகொரியா மற்றும் தென்கொரியா என இரண்டாகப் பிரிந்தது. இரு நாடுகளும் ஒரே நாளில் தன் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. இருநாடுகள் பிரிந்து 70 ஆண்டுகள் கடந்ததை நினைவு கூரும் வகையில் வடகொரியா அரசு பிரமாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளது.

இந்த விழாவில் வடகொரியா அரசு தனது நட்பு நாடுகளான ரஷியா, சீனா நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது  வடகொரியாவின் அழைப்பை ஏற்று  ரshய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷெர்ஜி ஷோய்கு அரசுமுறை பயணமாக வடகொரியா சென்று உள்ளார்.அவர்  வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன்னை சந்தித்தார்.

அவர் ரஷிய அதிபர் புதின் வழங்கிய கடிதத்தை கிம்மிடம் ஒப்படைத்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. ஒரு ராணுவக் குழுவை ஷோய்கு தலைமையில் அனுப்பியதற்காக புதினுக்கு கிம் நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பு வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாரம்பரிய நல் உறவுகளை மேலும் ஆழப்படுத்தியது எனக் கூறப்படுகிறது.